இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு டிசம்பர் 27-ந்தேதியான நாளை 56வது பிறந்த நாள் ஆகும். தனது ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாளின்போதும் தனது பன்வெல் பண்ணை வீட்டில் பிறந்தநாளை கொண்டாடும் சல்மான்கான் அங்குதான் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து வந்தார். அதேபோல் கடந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் இந்த பண்ணை வீட்டில்தான் அதிகப்படியான நாட்களை கழித்து வந்த சல்மான்கான், அங்கிருந்தபடியே போட்டோஷீட் நடத்தியும் வெளியிட்டு வந்தார்.
இந்தநிலையில் நாளை அவரது பிறந்த நாள் என்பதால் அவரது பன்வெல் பண்ணை வீடு சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை அந்த பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தபோது சல்மான்கானின் கையில் ஒரு பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவரை கடித்தது விஷமற்ற பாம்பு என்பது தெரியவந்துள்ளது. என்றாலும் அவருக்கு விஷ எதிர்ப்பு ஊசி செலுத்தப்பட்டு சில மணி நேரம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதை யடுத்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அதனால் நாளை நடைபெறும் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் வழக்கம்போல் சல்மான்கான் பங்கேற்பார் என்று தெரியவந்துள்ளது.