கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகைகள்
25 டிச, 2021 - 11:06 IST
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரை நட்சத்திரங்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி அதன் படங்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை ஹன்சிகா நேற்று நள்ளிரவே கிறிஸ்துமஸ் கொண்டாட்ட படங்களையும் வீடியோவையும் வெளியிட்டார்.
மஞ்சிமாமோகன், சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை லாஸ்லியா, கிறிஸ்துமஸையொட்டி எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது வெளியிட்டுள்ளார்.
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகளும் மாநாடு படத்தின் ஹீரோயினுமான கல்யாணி பிரியதர்ஷன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதேபோன்று ரஜினிகாந்த்தின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ஆகிய இருவரும் இணைந்து கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின்போது ஐஸ்வர்யா தனுஷின் மகன்களும் உடனிருந்தனர்.
கீர்த்தி சுரேஷ் லண்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா, சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் அவரது மனைவி பூஜா ஆகியோரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதேப்போன்று நடிகைகள் ராஷி கண்ணா, லட்சுமி மஞ்சு மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.