'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் படம் மலையன் குஞ்சு. சஜிமோன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை பஹத் பாசிலின் தந்தையான இயக்குனர் பாசில் தான் தயாரிக்கிறார். பஹத் பாசிலை வைத்து டேக் ஆப், மாலிக், சி யூ சூன் ஆகிய படங்களை இயக்கிய படத்தொகுப்பாளரும் இயக்குனருமான மகேஷ் நாராயணன் இந்தப்படத்திற்காக ஒளிப்பதிவாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையமைக்கிறார் என்கிற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மலையாளத்தில் முதன்முதலாக மோகன்லால் நடித்த யோதா படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் பிரித்விராஜின் ஆடுஜீவிதம் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
அந்தவகையில் மலையன் குஞ்சு அவரது மலையாளத்தில் மூன்றாவது படமாக இருக்கும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தான் இயக்கிய தமிழ் படங்களுக்கு இளையராஜாவை இசையமைக்க வைத்த இயக்குனர் பாசில், தற்போது தான் தயாரிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க ஒப்பந்தம் செய்திருப்பது தான்.