அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? | ஒரேநாளில் மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் நடித்த படங்கள் | அப்போ தெரியலையா? வனிதாவை வெளுத்து வாங்கிய கஸ்தூரி |
சென்னை: நடிகர் விஜய்யின் உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தை தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ. நடிகர் விஜய்யின் உறவினரான இவர் ஏற்கனவே சில படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் உள்ளார். திரைப்படங்களின் முதலீடு தவிர மற்ற சில தொழில்களும் செய்து வருகிறார் சேவியர் பிரிட்டோ.
இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து இன்று (டிச.,22) வருமான வரித்துறை அதிகாரிகள் இவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சேவியர் பிரிட்டோவின் வீடு மட்டுமல்லாமல், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள அவரது அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
சீன நிறுவனமான சியோமி, ஓப்போ நிறுவனங்களுக்கு சொந்தமான 25 இடங்களில் நேற்று முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.