2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இதனிடையே, சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவியது. லேசான இருமலுக்காக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொண்டார் சமந்தா. அதை வைத்து வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். அதன்பின் சமந்தாவின் மானேஜர் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என விளக்கம் கொடுத்தார்.
நேற்று இரவு சமந்தா ஒரு செல்பி புகைப்படத்தைப் பதிவிட்டு, “நாள் முழுவதும் தூங்கினேன், இப்போது இரவு 9 மணிக்குதான் எழுந்தேன்” எனப் பதிவிட்டு தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தொடர்ந்து சமூகவலைதளத்தில் சில பதிவுகளையும் பதிவிட்டுள்ளார்.