'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகையும், ஆந்திர மாநில எம்எல்ஏ.,வான ரோஜா நேற்று ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு தனியார் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் சுமார் 70 பயணிகள் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர். திருப்பதி விமான நிலையத்தை அடைந்தபோது, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தை பெங்களுருவை நோக்கித் திருப்பி பெங்களூரில் தரையிறக்கியுள்ளனர்.
இதுகுறித்து ரோஜா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு விமானத்தில் பயணித்தேன். தரையிறங்கும் சமயத்தில் திடீரென மேகமூட்டம் இருப்பதாக சொன்னார்கள். போதிய பெட்ரோல் இல்லை என்றார்கள், பின்னர் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக மாறி மாறி அறிவித்தார்கள்.
பெங்களூரு விமான நிலையத்தில் நாங்கள் சுமார் 4 மணி நேரமாக விமானத்திற்கு உள்ளேயே காத்திருக்கிறோம். எங்களை வெளியே செல்ல அனுமதிக்க மறுத்தார்கள். சமீபத்தில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாக விமானத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் வலி அதிகமாக உள்ளதாகக் கூறி வெளியே செல்ல அனுமதி கேட்டும் மறுத்தனர். மேலும், விமானத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கூறினர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருக்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.