டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
கடந்த இரண்டு வருடங்களாகவே இயக்குனர் கவுதம் மேனன் கிட்டத்தட்ட முழு நேர நடிகராகவே மாறி வருகிறார். தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ் ஆகிய படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ஒரு நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்தார் கவுதம் மேனன். இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகும் லவ்புல்லி யுவர்ஸ் வேதா என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் கவுதம் மேனன்.
கர்ணன், ஜெய்பீம் படங்களில் நடித்த ரஜிஷா விஜயன் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, மலையாள இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி மற்றும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் கல்லூரி பின்னணியில் நிகழும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பிரகேஷ் சுகுமாரன் இந்தப்படத்தை இயக்குகிறார்.