சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தின் கடுவா என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் பிருத்விராஜ். இந்தப்படத்தின் கதை கேரளாவில் உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவா குன்னேல் குருவச்சன் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஆனால் அதையடுத்து கடுவா குன்னேல் குருவச்சன் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கடுவா படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் என்னுடைய வாழ்க்கையை படமாக்க படக்குழுவினர் அனுமதி கேட்டனர். அப்போது எனது கதாபாத்திரத்தில் மோகன்லால் அல்லது சுரேஷ் கோபி நடிக்க வேண்டும். குறிப்பாக சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பழிவாங்கும் நோக்கத்தில் நான் செயல்பட்டதாக எனது கதாப்பாத்திரத்தை சித்தரிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் அவர் அனுமதி வழங்கி இருக்கிறார். அதையடுத்து அவரது கதையை படமாக்க தொடங்கிய ஷாஜி கைலாஷ், மோகன்லால், சுரேஷ்கோபி அல்லாமல் பிரிதிவிராஜை நாயகனாக வைத்து அந்த கதையை படமாக்கியிருக்கிறார். இதை படத்தின் டிரைலர் வெளியான போது பார்த்து அதிர்ச்சி அடைந்த கடுவா கு ன்னேல் குருவச்சன் எனது கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. அதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரது மனுவை விசாரித்த எர்ணாகுளம் இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி படத்துக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.