சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தெலுங்கு சீனியர் நடிகர் மோகன் பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் ஜோதிகாவுடன் இணைந்து காற்றின் மொழி என்கிற படத்தில் நடித்தார் லட்சுமி மஞ்சு. இந்தநிலையில் மோகன்லாலுக்கு ஜோடியாக மான்ஸ்டர் படம் மூலம் மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற புலி முருகன் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வைசாக்கும், மோகன்லாலும் இந்தப்படத்திற்காக இணைந்துள்ளனர்.
லட்சுமி மஞ்சுவுக்கு இந்தப்படத்தில் ஆக்சன் காட்சிகளும் இருக்கின்றன. இதற்காக கிருஷ்ணதாஸ் வல்லபன் என்கிற மாஸ்டரிடம் அவர் களரி பயிற்று மற்றும் குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளையும் கற்று வருகிறார். தற்போது 44 வயதாகும் லட்சுமி மஞ்சு, களரியில் தான் விதவிதமான பயிற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.