முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் | ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை |
இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா. விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2019ல் தொடங்கப்பட்டு கொரோனா தொற்று காரணமாக தாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான லலித்குமார் தயாரித்துள்ள இப்படம் எப்போது ரிலீசாகப்போகிறது என்று விக்ரமின் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோப்ராவை வெளியிட திட்டமிட்டிருப்பதாக லலித்குமார் தெரிவித்துள்ளார். ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.