இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தின் முதல் சிங்கிள் 'நாங்க வேற மாரி' மற்றும் படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ ஆகியவை இதற்கு முன்பு வெளியாகி உள்ளன. அதன்பின் எந்த ஒரு வீடியோவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. அம்மாவை போற்றும் விதமாக உருவாகி உள்ள இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 'நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ' என அஜித் பேசுவதைத் தொடர்ந்து, பாடலும் அப்படியே ஆரம்பிக்கிறது. நேற்று மாலை வெளியிடப்பட்ட இந்த பாடல் யூடியூபில் இன்று காலைக்குள்(15 மணிநேரத்தில்) 22 மில்லியன் பார்வையாளர்களையும் 4 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் டிரெண்டிங்கில் முதல் இடத்திலேயே இருந்து வருகிறது.