நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றிப் படத்தில் பணி புரிந்தவர்கள் அவர்களது சம்பளத்தை ஏற்றிவிடுவார்கள். காலம் காலமாக இதுதான் நடந்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'மாநாடு' படம் எதிர்பார்ப்புகளை மீறி வெற்றி பெற்றுள்ளது. படத்தைப் பற்றி பலரும் பாராட்டிவிட்டார்கள்.
இந்தப் படத்தின் வெற்றியால் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதையைத் தொட்டிருக்கிறார் சிம்பு. தற்போது 'வெந்து தணிந்தது காடு, பத்து தல' ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு இனி ஒப்பந்தமாக உள்ள புதிய படங்களில் நடிக்க சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், எஸ்ஜே சூர்யா ஏற்கெனவே நடிக்க ஒத்துக் கொண்ட படங்களில் கூட சம்பளத்தை உயர்த்திக் கேட்டு வருகிறாராம். 'மாநாடு' படத்தில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. புதுவிதமான வில்லத்தனத்தில் சூர்யா ரசிகர்களைக் கவர்கிறார் என அவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க பலரும் திட்டமிட்டுள்ளார்களாம்.
இயக்குனராக விஜய், அஜித் ஆகியோருக்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த எஸ்ஜே சூர்யா, தனக்குக் கிடைத்த 'மாநாடு' திருப்புமுனையால் சம்பளத்தை உயர்த்துவதும் தவறில்லை. அதற்காக ஏற்கெனவே நடிக்க ஒத்துக கொண்ட படங்களில் உயர்த்துவது தவறு என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.