நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து நடித்து வருகிறார் கமல். அவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை எடுத்து வரும் கமல் அதன்பிறகு இரண்டு வாரங்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு மீண்டும் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார்.
விக்ரம் படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தை கமல் தயாரித்து நடிக்கப்போவதாக முன்பு தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக கமலின் பிறந்த நாளன்று அவரை நேரில் சந்தித்தபோதே கதையின் ஒன்லைனை சொல்லி ஓகே பண்ணி விட்டார் பா.ரஞ்சித். இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தை இயக்க உள்ளார் ரஞ்சித். இந்த படத்தை முடித்ததும் கமல் நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறாராம்.