
அஜித் குரலுடன் தொடங்கும் வலிமை செகண்ட் சிங்கிள்
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். "நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ" என அஜித் பேசுவதைத் தொடர்ந்து, பாடலும் அப்படியே ஆரம்பிக்கிறது. இதைக்கேட்ட ரசிகர்கள் அந்த ப்ரோமோவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து முழு பாடல் வரும் 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!