பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
பொதுவாக இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அதிகம் பேச மாட்டார். தனது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில்கூட அதிகபட்சம் 3நிமிடத்துக்கு மேல் பேசமாட்டார். தனது பாடல்களின் வெற்றி குறித்தும் அவர் பேசியதில்லை. முதன் முறையாக மாநாடு படம் குறித்து ஒரு அறிக்கையே வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது கனிந்த இதயத்துடன், மாநாடு வெற்றிக்கு காரணமான அனைனவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இத்திரைப்படம் தனிப்பட்ட முறையில் என் இதயத்திற்கு நெருக்கமானதும், மிகவும் சிறப்பு மிகுந்ததுமான ஒரு படைப்பாகும். வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருடன் தனித்தனியே இணைந்த, எனது முந்தைய படங்களில் எண்ணற்ற வெற்றி பாடல்கள் இருந்தன, ஆனால் எங்கள் கூட்டணியில் ஒரு திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பது இதுவே முதல் முறை.
ஆனாலும், இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் பின்னணி இசையில் எனது புதிய முயற்சிகளை கூர்மையாக கவனித்து, அவற்றை தனித்த முறையில் பாராட்டியது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தது. என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு நன்றி. எனது நண்பர் மற்றும் சகோதரரான சிலம்பரசன் இந்த திரைப்படத்திற்காக தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பிற்காக, உழைப்பிற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
அவரது உழைப்பிற்கும் முயற்சிக்கும் அனைத்து தரப்பிலும் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதை கண்டு நான் இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறேன். எஸ்.ஜே.சூர்யா தனது முழு நடிப்பு ஆற்றலையும், இந்தப் படத்தில் பயன்படுத்தியதன் மூலம், படத்திற்கு வலுவானதொரு தூணாக மாறியுள்ளார். மாநாடு படத்தினை சிறப்பான ஒரு படைப்பாக மாற்ற, ஒவ்வொரு கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனது இசை பற்றியும் மற்றும் படம் பற்றிய நேர்மறையான செய்தியைப் பரப்பியதற்காக விமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நீங்கள் உண்மையாக தேடி அலைவது, உங்களைத் தேடி வந்தடையும் என்று ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. மாநாடு திரைப்படத்தின், ஒட்டுமொத்த குழுவிற்கும் அனைவரிடமிருந்தும் அளவற்ற அன்பும் பாராட்டுக்களும், கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி.
இவ்வாறு அந்த அறிக்கையில் யுவன் கூறியிருக்கிறார்.