ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' |
மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ளது மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம். இந்தபடம் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 83 கோடி செலவில் இந்தப்படம் உருவாகியுள்ளது. ஆனால் ஒடிடியில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதற்காக கேட்டும் கூட கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தப்படத்தை கொடுக்காமல் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு காத்திருந்தார் அதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்..
ஆனால் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கூட இந்தப்படத்தை தற்போதைய சூழலில் தியேட்டர்களில் வெளியிட்டால் படத்திற்காக போட்ட முதலீட்டை அப்படியே திரும்ப எடுக்க முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டதால், தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஒடிடியில் ரிலீஸ் செய்ய தயாரானார்.
இந்த சமயத்தில் கேரள அரசு தலையிட்டு தியேட்டர் வெளியீட்டில் சில விஷயங்களில் உதவி செய்ய முன் வந்தது. அதை தொடர்ந்து மனதை மாற்றிக்கொண்ட தயாரிப்பாளர் மரைக்கார் படத்தை தியேட்டர்களில் வெளியிட மீண்டும் முன்வந்தார். அந்தவகையில் கேரளாவில் 625 தியேட்டர்கள் உட்பட உலகெங்கிலும் சேர்த்து 4100 திரையரங்குகளில் 16000 காட்சிகள் தினமும் திரையிடப்பட இருக்கின்றன.
இந்தநிலையில் படத்திற்கான முன்பதிவு சமீபத்தில் துவங்கப்பட்டது.. தற்போது வரை முன்பதிவிலேயே நூறு கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்கிற தகவல் தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே வெளியாகியுள்ளது. அந்தவிதமாக இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படி முன்பதிவிலேயே அதிகம் வசூலித்த முதல் படம் இதுதான் என்கிற சாதனையையும் இந்தப்படம் செய்துள்ளது. .