தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர். சமூக வலைத்தளத்தில் வில்லங்கமான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். ஆபாச படங்களை இயக்கி அதையும் பரபரப்பாக்குவார். கொரோனா காலத்தில் தனது சொந்த ஓடிடி தளத்திற்காக கவர்ச்சி படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் லடுகி என்ற படம் இந்தியாவின் முதல் தற்காப்பு கலை படம் என்ற போர்வையில் அடுத்த கவர்ச்சி படமாக வெளியாக இருக்கிறது. இந்த படம் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பெண் என்ற பெயரில் தமிழிலும் வெளியாகிறது. லடுகி என்ற பெயரிலேயே இந்தியிலும் வெளியாகிறது. பூஜா பலேகர் என்ற தற்காப்புக்கலை வீராங்கனை இதில் நடித்துள்ளார்.