21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' | 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா' | ரம்பாவுக்குப் பிறகு ரகுல் ப்ரீத்…இப்படி ஒரு கிளாமர் !! | நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா | இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் |

தமிழ் சினிமாவில் அம்மன் படங்களுக்கென்றே தனி சீசன் இருந்த காலம் உண்டு. கே.ஆர்.விஜயா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் அம்மன் வேடத்தில் நடித்தே புகழ்பெற்றார்கள். அம்மன் திருவிழா காலங்களில் அம்மன் படங்களை தியேட்டரில் மீண்டும், மீண்டும் வெளியிடுவார்கள். தொலைக்காட்சிகளில் பக்தி சீரியல்களின் வருகைக்கு பிறகு அம்மன் படங்கள் வெளிவரவில்லை.
இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு உத்ரா என்ற பெயரில் அம்மன் படம் ஒன்று வருகிறது. இதில் கவுசல்யா அம்மனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். நவீன் கிருஷ்ணா இயக்கியுள்ளார். உத்ராவாக ரக்ஷா நடிக்கிறார். சாய்தேவ் இசை அமைக்கிறார், ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் நவீன் கிருஷ்ணா கூறியதாவது: வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை, அவ்வளவு ஏன்? திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது. அப்படியே, அந்த மண்ணில் மீறி திருமணம் நடந்தாலும் அந்த புது மண தம்பதி அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள். இதன் பின்னணி என்ன என்பதை பக்தி கலந்து படம் விவரிக்கிறது. அடுத்த மாதம் 10ம் தேதி வெளிவருகிறது. என்றார்.