லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
'கோலமாவு கோகிலா, டாக்டர்' படங்களைத் தொடர்ந்து நெல்சன் இயக்கி வரும் படம் 'பீஸ்ட்'. விஜய் கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 100வது நாளாக நடைபெறுவதை முன்னிட்டு படத்தின் இயக்குனர் நெல்சன் ஒரு குழு புகைப்படம் ஒன்றை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருந்தார்.
அதே புகைப்படத்தைப் பகிர்ந்து படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே படம் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். “கடைசி கட்ட நடிப்புக்காக எங்கள் இசைக்குழு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. இது மிகவும் பொழுதுபோக்கான ஒன்றாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பதைத் தெரிவித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. எனவே, படம் 2022 கோடை விடுமுறையில்தான் வெளிவர வாய்ப்புகள் அதிகம்.