''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
வெளிவருமா வராதா என்கிற கடைசி நிமிட திக் திக் போராட்டங்களுடன் நேற்று முன்தினம் வெளியானது சிம்புவின் மாநாடு படம். கதாநாயகனாக சிம்புவுக்கு கைகொடுத்த படமாக மட்டுமல்ல, ஹீரோ சிம்புவா இல்லை எஸ்ஜே சூர்யாவா என கேட்கும் அளவுக்கு இருவருக்குமே முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. படம் வெளியானதில் இருந்து சிம்புவுக்கு இணையாக, சொல்லப்போனால் அவரைவிட ஒரு பங்கு அதிகமாகவே எஸ்ஜே சூர்யாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த கதாபாத்திரத்தில் இவருக்கு முன் நடிப்பதற்காக அரவிந்தசாமியைத்தான் அணுகினாராம் வெங்கட்பிரபு.. ஆனால் படம் ஆரம்பிக்க தாமதமானது, படம் துவங்கப்படுமா என சந்தேகங்கள் எழுந்தது உள்ளிட்ட விஷயங்களால் இந்தப்படத்தில் அரவிந்த்சாமியால் நடிக்க முடியாமல் போனதாம். அதன்பிறகு எஸ்.ஜே.சூர்யாவை வெங்கட்பிரபு அணுக, கதையை கேட்டதும் அடுத்த நிமிடமே ஒப்புக்கொண்டாராம்.
ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தபின் அவருக்கான வசனங்களில் மாற்றங்களை வெங்கட்பிரபு செய்ய ஆரம்பித்தாராம்.. அதெல்லாம் வேண்டாம் அப்படியே கொடுங்க சார், என கேட்டு வாங்கி அதை தனது மாடுலேஷனில் இம்ப்ரூவ் செய்துகொண்டாராம் எஸ்ஜே சூர்யா. இந்த தகவலை தற்போது ஒரு பேட்டியில் இயக்குனர் வெங்கட்பிரபுவே தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் தீபாவளிக்கு மாநாடு வெளியாகலைன்னா என்ன, மாநாடு வெளியாகுற அன்னைக்கு தான் தீபாவாளின்னு எஸ்ஜே சூர்யா சொன்னது உண்மை தான் என்பதை மெய்ப்பிப்பது போல படத்தின் வெற்றி அமைந்துள்ளது.,