22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பிக்பாஸ் சீசன் 5-ல் அபிஷேக் ராஜா வைல்டு கார்டு மூலம் ரீ என்ட்ரி கொடுத்ததையடுத்து நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக மேலும் இரு பிரபலங்கள் உள்ளே சென்றுள்ளனர்.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி இடம் எப்போதும் உண்டு. தற்போது அந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனும் வெற்றிகரமாக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. பிக்பாஸ் சீசன் 5, 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில் சில எலிமினேஷன்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் முன்னதாக எலிமினேஷன் ஆகி வெளியேறிய அபிஷேக் ராஜா மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் கடந்தவாரம் நுழைந்திருப்பது பலரிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் ரசிகர்களும் அபிஷேக்கின் என்ட்ரியை விஷப்பூச்சி கம்மிங் பேக் என கிண்டலடித்தனர்.
தற்போது வைல்டு கார்டு என்ட்ரியாக மேலும் இரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள். இரு தினங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டில் 50 நாட்களை தாண்டியுள்ள புது எண்ட்ரியாக நடன இயக்குநர் அமீர் இணைந்தார். புதிதாக நுழைந்திருக்கும் இவரால் பிக்பாஸ் கேமை சிறப்பாக விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள பிக்பாஸ் புரமோக்களில் நடிகர் சஞ்சீவ் உள்ளே சென்றுள்ளார். நடிகர் விஜய்யின் நண்பரும் பல படங்களில் குணச்சித்ர வேடங்களிலும், சின்னத்திரையில் நாயகராகவும் வலம் வரும் இவர் இப்போது பிக்பாஸ் போட்டிக்குள் சென்றுள்ளார். இந்த இருவரின் வருகை பிக்பாஸ் வீட்டினுள் இனி எத்தைகய மாற்றங்கை நிகழ்த்த போகிறது என பொருத்திருந்து பார்க்கலாம்.