கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா இணைந்து நடித்துள்ள படம் கிராண்மா. மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பவுர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிஎம்ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா ,சூர்யா ஜே. மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா , மரினா மைக்கேல் , கோகுல்சுரேஷ் , சரத் அப்பானி,ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரைப் பிரபலங்கள் நேற்று வெளியிட்டனர்.
படம் பற்றி இயக்குனர் ஷிஜின்லால் கூறியதாவது: எங்கள் மீது நம்பிக்கை வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை அன்புடன் வெளியிட்டுள்ள திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்படம் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் புது அனுபவமாக இருக்கும் என்பதை நான் உறுதியாக கூறுவேன்.
படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே தங்களது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள். கதையிலும், காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால், சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.
கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வர வேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகள் உருவாக்கியுள்ளது. சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது. என்றார்.