பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! |
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வரும் நவ-25ம் தேதி மாநாடு படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இதன் பிரீ புரமோஷன் நிகழ்ச்சியில், தன்னை சுற்றி பலர் பிரச்னை செய்கிறார்கள் என்று கூறி சிம்பு மேடையிலேயே கண் கலங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் வேட்டை மன்னன் படத்தில் நடித்த சிம்பு, அந்தப்படம் ஏன் கைவிடப்பட்டது என தற்போது மனம் திறந்துள்ளார்.
"வேட்டை மன்னன் படம் கிட்டத்தட்ட ஒரு கல்ட் கிளாசிக் படம். அந்தப்படத்தை அப்போது செய்தால் சரியாக இருக்காது என அதை நிறுத்திவிட்டோம். நெல்சன் திலீப்குமார் திறமையான இயக்குனர். அவருடைய டாக்டர் படத்தில் ஒர்க் அவுட் ஆன டார்க் காமெடியை ரசித்தேன். ஆனால் வேட்டை மன்னன் படத்தின் டார்க் காமெடியில் பத்து சதவீதம் கூட டாக்டரில் இல்லை என்றுதான் சொல்வேன்" என கூறியுள்ளார்.