பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழில் மங்காத்தா, சென்னை 28-2, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மஹத் ராகவேந்திரா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தற்போது ஹீரோவாகவும் பயணித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் கால்பதிக்கிறார். ஹிந்தியில் சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து இன்னொரு நாயகனாக நடிக்கிறார். சோனாக்ஷி சின்ஹா, ஹூயுமா குரேஷி ஆகியோரும் நடிக்கின்றனர். லண்டனில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
ஹிந்தியில் நடிப்பது பற்றி மஹத் கூறுகையில், ‛‛பாலிவுட் படத்தயாரிப்பில் உள்ள நண்பர் சுதீஷ் சென், என்னை பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்ய சொன்னார். இப்பட ஆடிசனில் பங்கேற்று தேர்வானேன். சோனாக்ஷி சின்ஹா, ஹூயுமா குரேஷி போன்ற பிரபலமான பாலிவுட் நட்சத்திரங்கள் உடன் நடிக்க முதலில் தயக்கம் இருந்தது. ஆனால் இருவரும் என்னிடம் இயல்பாக பழகியதோடு படத்தில் சிறப்பாக நடிக்க நம்பிக்கை தந்தனர். இன்னொரு சக நடிகரான ஜாஹிரை சகோதரராக உணர்ந்தேன். அந்தளவுக்கு படப்பிடிப்பில் எனக்கு உறுதுணையாக இருந்தார். பாலிவுட்டில் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது. ஹிந்தி பேச மனைவி பிராச்சி உதவினார். பெண்களுக்காக ஒரு செய்தியை அழுத்தமாக கூறும் படம் இருக்கும். நான் நினைத்தே பார்த்திராத ஒரு கனவு குழுவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இந்த அற்புதமான அனுபவத்திற்காக கடவுளுக்கு நன்றி. லண்டனில் படப்பிடிப்பு முடிந்து தற்போது டில்லியில் படப்பிடிப்பு நடக்கிறது'' என்றார்.