சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
வடிவேலு நடித்த தெனாலிராமன் மற்றும் எலி ஆகிய படங்களை இயக்கியவர் யுவராஜ் தயாளன். இவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்த நிலையில் அந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.
யுவராஜ் சொன்ன கதை பிடித்து தான் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டார் என்றாலும், தற்போது பாலிவுட்டில் அவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக யுவராஜ் படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த தேதிகளையும் ஷாருக்கான் படத்திற்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டதாம். அதனாலேயே அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக விக்ரம் வேதா நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.