புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் ராஜமவுலி இயக்கி உள்ள ஆர்.ஆர்.ஆர் படம் வருகிற ஜனவரி 7ம் தேதி திரைக்கு வருகிறது. ரூபாய் 450 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த நேரத்தில் ஆந்திர அரசு நிர்ணயித்துள்ள தியேட்டர் டிக்கெட் கட்டணம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள தங்களின் படத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும். அதனால் ஆர்ஆர்ஆர் படத்திற்கு டிக்கெட் விலையை அதிகப்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் செல்லப்போவதாக செய்தி கோலிவுட்டில் வெளியாகி வந்தது.
ஆனால் அந்த செய்தியை ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர் மறுத்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திரா அரசு சில மாதங்களுக்கு முன்பு தியேட்டர்களில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்தது. தியேட்டர் இருக்கைகளின் எண்ணிக்கையை பொறுத்து டிக்கெட் விலை உறுதி செய்யப்பட்டது. அதன்படி கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் விலை குறைவாகவும், நகர்ப்புறங்களில் உள்ள தியேட்டர்களில் விலை அதிகமாகவும் ஆந்திர அரசு முடிவு செய்தது. ஆனால் ஆந்திர அரசின் இந்த முடிவினால் பெரிய பட்ஜெட் படங்களின் வசூல் குறைய தொடங்கியது.
அதன்பிறகு இது சம்பந்தமாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்தப் பேச்சுவார்த்தைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இன்னும் ஒரே மாதத்தில் சங்கராந்தி பண்டிகை வருவதால் ஆர்ஆர்ஆர் உட்பட பல படங்கள் திரைக்கு வருகின்றன. மற்ற படங்களை எல்லாம் விட எங்களது படம் பிரமாண்ட பட்ஜெட் என்பதால் ஆந்திர அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூல் செய்ய முடியாது. இந்த குறைவான டிக்கெட் விலை எங்களது படத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்பதை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து விளக்கி வருகிறோம். அதனால் சீக்கிரமே அது குறித்த நல்ல முடிவினை அவர் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
மற்றபடி ஆந்திர அரசின் டிக்கெட் கட்டண முடிவை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் செல்வதாக வெளியான செய்தி உண்மை அல்ல. அது முற்றிலும் தவறானது என்று ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர் ஒரு மறுப்பு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.