ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கடந்த சில தினங்களாக பெய்த அடைமழையின்போது கல்லறையில் மயங்கி கிடந்த வாலிபர் ஒருவரை தன் தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு வாழ்த்துகள் குவிந்தது. முதல்வரே அழைத்து பாராட்டினார். ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர் சினிமாவில் காவல்துறையை தவறாக சித்தரிப்பதாக தனது வருத்தத்தை பதிவு செய்தார். அதன் விபரம் வருமாறு:
அறிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் இக்ஷு. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.
விழாவில் போலீஸ் ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசியதாவது: காவல் துறையில் நான் மட்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறேன். என்னைப்போன்று பல காவலர்கள், அதிகாரிகள் முன் களப் பணியாற்றி மக்கள் சேவை செய்து வருகிறார்கள். அவர்களும் புகழுக்கும் போற்றுதலுக்குரியவர்கள் என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காவல் துறை எப்போதும் உங்கள் நண்பன் என்பதுதில் மாற்றமே இல்லை.
சினிமா சமூகத்தில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. பல படங்களில் காவல் துறையை கண்ணியமாக காண்பித்துள்ளார்கள். சில படங்களில் காவல் துறையை தவறாகவும் சித்தரித்துள்ளனர். காவல் துறையின் சேவை இல்லையென்றால் மக்களின் நிம்மதி பறிபோய்விடும். குற்றங்கள் பெருகிவிடும். காக்கி என்றால் விரோதமாக பார்க்கும் மனநிலையை கைவிட வேண்டும். காக்கி உடைக்குள்ளும் ஈரம் இருக்கிறது. நாங்கள் வெளியேதான் பலா மாதிரி தெரிவோம். உள்ளே இனிக்கும் சுளை.
மக்கள் சேவைதான் எங்களுக்கு முக்கியம். எங்களை நேசியுங்கள். காவல் துறையினர் பொதுப் பணியில் இருப்பதால் நல்லது, கெட்டது என்று தங்கள் வீட்டு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் மக்கள் சேவையில் இருப்பார்கள். காவல் துறை என்பது உங்கள் சேவைக்காக மட்டுமே. பயப்படாமல் நீங்கள் எங்களை அணுகுங்கள். இதற்கு யாருடைய துணையும் வேண்டாம். உங்கள் பிரச்சனை எதுவோ நேரிடையாக வாருங்கள். நாங்கள் தீர்வுக்கு வழி வகுக்கிறோம். காவல் துறை புனிதமான துறை என்றார்.