'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
மலையாளத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'லூசிபர்'. இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்க ரீமேக் செய்து வருகிறார்கள். படத்தில் நயன்தாரா கணவர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்ய தேவ் என்ற சிறிய நடிகரைத் தேர்வு செய்துள்ளார்கள். ஆனால், தனக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்கக் கூடாது என படத்தின் இயக்குனர் மோகன் ராஜாவிடம் நயன்தாரா கூறியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிக்க விரும்பும் நயன்தாரா, சிறிய நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுப்பதே அதற்குக் காரணம். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்ட நிலையிலும், சத்ய தேவை ஒப்பந்தம் செய்துவிட்டதாலும், நயன்தாராவை சமாதானப்படுத்த படக்குழு முயற்சி செய்து வருகிறதாம்.
மலையாளத்தில் அந்தக் கதாபாத்திரத்தை விவேக் ஓபராய் ஏற்று நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரத்தில்தான் சத்ய தேவ் நடிக்க உள்ளார். படத்தின் முக்கிய வில்லனே இந்தக் கதாபாத்திரம் தான். படக்குழுவினரின் சமாதானத்தை நயன்தாரா ஏற்பாரா அல்லது அவரது விருப்பப்படி படக்குழு நடக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.