'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் இளம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுன் ஜோடியாக 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற 'ஸ்ரீவள்ளி', 'சாமி சாமி' பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போதும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் படப்பிடிப்பின் லஞ்ச் இடைவெளியில் சுவாரசியமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா. அதில் கை விரல்கள் பகுதி மட்டும் அவரது வழக்கமான உடல் நிறத்தில் இருக்க, கையின் மற்ற பகுதி கருப்பு நிறத்தில் இருக்கிறது.
படத்தில் மேக்கப் மூலம் அவரை கருப்பான பெண்ணாக மாற்றியிருக்கிறார்கள். மேக்கப் மூலம் எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க ராஷ்மிகா இந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பார் போலிருக்கிறது.
செம்மரக் கடத்தல் பற்றிய படம் என்பதால் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆகியோர் தமிழர் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களா என்ற சந்தேகம் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட போதே எழுந்தது. படம் வெளிவரும் சமயம் ஏதாவது சர்ச்சைகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.