பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் யஷ்? | சல்மான் கான், ஆமீர்கானுக்கு விருந்தளித்த ராம்சரண் | திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பம், பாலிவுட் சர்ச்சை | தடைகளைத் தாண்டி தயாராகப் போகும் 'இந்தியன் 2' | 'வீட்ல விசேஷம்' வெற்றி : பரிசுகளை வழங்கிய ஆர்ஜே பாலாஜி | நடிகை மீனாவின் கணவர் காலமானார் | வெள்ளை ஆடையில் தேவதை போல… கீர்த்தி சுரேஷா இது? | சூர்யாவின் 'வாடி வாசல்' மேலும் தள்ளிப் போகும் ? | ஒரே மாதத்திற்குள் ஓடிடிக்கு வரும் 'சாம்ராட் பிரித்விராஜ்' | விஜய்யின் வாரிசு படம் குறித்து தமன் வெளியிட்ட அப்டேட் |
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணத்திற்கு பத்ம விருதுகளில் உயர்ந்த விருதான பத்மவிபூஷன் விருது சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விழாவில் அப்பாவின் சார்பில் மகன் சரண் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சங்கராபரணம் படத்துக்கான முதல் தேசிய விருது முதல் பத்மவிபூஷன் வரை பெரும்பாலான விருதுகளை அரசாங்கத்திடம் இருந்து அப்பா பெற்றிருந்தார். அவர் விருதுகளை வேண்டாம் என்று சொல்லவே இல்லை. அவர் தனது சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொண்டார், எந்தவொரு கலைஞருக்கும், அவர்களை ஊக்கப்படுத்த அங்கீகாரம் தேவை. தேசத்திலேயே மிக உயர்ந்த அங்கீகாரம் ஒன்றைக் காட்டிலும் சிறந்த கவுரவம் என்ன இருக்க முடியும்.
எங்கள் குடும்பத்தினரும், ரசிகர்களும் அப்பாவின் சாதனைகளைப் பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறோமோ, அவ்வளவு துரதிர்ஷ்டவசமாக, அவர் அத்தகைய மரியாதையைப் பெறுவதற்கு முன்பே இறந்தார் என்பதில் கவலையும் கொள்கிறோம். அவரும் அவரது சாதனைகளும் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என்றார்.