பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
ராஜமவுலி இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் 'நாட்டு கூத்து' என்ற லிரிக் பாடலை யு-டியுபில் இரு தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
பாடலில் அவ்வப்போது ஒரிஜனல் வீடியோ காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோராது வேகமான நடன அசைவுகள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளன. யூ டியூபில் இடம் பெறும் வீடியோக்களின் வேகத்தை நாம் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். அதற்கான வேகத் தேர்வுகள் செட்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும்.
“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த 'நாட்டு கூத்து' பாடலின் வீடியோ வேகத்தை '0.5 x' குறைத்தாலும் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரின் நடன அசைவுகள் வேகமாக உள்ளது,” எனப் பதிவிட்டு பாராட்டியுள்ளனர்.
“அவர்களது நடனம் யு டியுப் இன்டர்நெட் வேகத்தை விட மிக அதிகமாக உள்ளது என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார், அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்,” என்றும் யு டியூப் இந்தியா பாராட்டியுள்ளது.