பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! | காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு : இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு | ப்ரீ புக்கிங்கில் முந்தும் 'டியூட்' | 3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர் | அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் |
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது அட்டகத்தி பாணியில் காதலை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது கமலிடத்தில் ஒரு ஒன்லைன் கதையை கூறி அவரை இம்ப்ரஸ் செய்திருக்கிறார். அதையடுத்து இந்த ஒன்லைனை முழு படமாக தயார் செய்யுமாறு கூறியிருக்கிறாராம் கமல்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அதைத்தொடர்ந்து ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு படத்திலும் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.