பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் போன்று தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி. இருவரது படங்களிலும் நடிக்க பல நடிகைகள் போட்டி போடுவார்கள். சிரஞ்சீவி தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
2015ல் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த 'வேதாளம்' படத்தை 'போலா சங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க அவரது தங்கையாக லட்சுமி மேனன் தமிழில் நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னா தற்போதுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமன்னா நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நவம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளது. இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளது பற்றி தமன்னா, “மெகா பிரம்மாண்டமான ஒரு படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. சிரஞ்சீவி சாருடன் மீண்டும் நடிப்பதற்கு ஆவலாய் காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு சிரஞ்சீவி நடித்த 'சை ரா நரசிம்ம ரெட்டி' படத்தில் அவரது காதலியாக நடித்திருந்தார் தமன்னா.