ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தெலுங்குத் திரையுலகத்தில் அதிரடி கதாநாயகன் எனப் பெயரெடுத்தவர் பாலகிருஷ்ணா. படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அடிக்கடி எதையாவது அதிரடியாகப் பேசி சர்ச்சையை இழுத்து விடுவார். சமீபத்தில் கூட ஏஆர் ரகுமான் பற்றி அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பாலகிருஷ்ணா 'ஆஹா' ஓடிடி தளத்தில் 'அன்ஸ்டாப்பபில்' என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். சினிமா பிரபலங்கள் பலரும் அதில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.
தெலுங்கு நடிகர் நானி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் வாழ்க்கையில் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பது எது என்பதற்கு பதிலளித்துள்ளார். அதில் தனது அப்பா என்டிஆர் படங்களும் தனது அபிமான பிராண்ட் ஆன 'சரக்கு' ஒன்றைப் பற்றியும் சொல்லி அவை போதும் எனக்கு கம்பெனி கொடுக்க என்று சொல்லியுள்ளார்.
சினிமா நடிகர்கள் தாங்கள் குடிப்பதைப் பற்றி பொதுவெளியில் பகிர மாட்டார்கள். ஆனால், பாலகிருஷ்ணா இப்படி பகிர்ந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.