இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
12வது நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியலை விழாக்குழு அறிவித்துள்ளது. அந்த படங்களும், அதன் இயக்குனர்களும் வருமாறு:
1. மாறா - திலீப்குமார்
2. சூரரைப் போற்று - சுதா கொங்காரா
3. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - தேசிங் பெரியசாமி
4. ஓ மை கடவுளே - அஸ்வத் மாரிமுத்து
5. சைக்கோ - மிஷ்கின்
6. காவல்துத்துறை உங்கள் நண்பன் - ஆர்.டி.எம்
7. க/பெ ரணசிங்கம் - பி.விருமாண்டி
8. அந்தகாரம் - வி.விக்னராஜன்
9. லாக் அப் - எஸ்.ஜி.சார்லஸ்
10. தாராள பிரபு - கிருஷ்ணா மாரிமுத்து
11. ஜிப்ஸி - ராஜீ முருகன்
12. மாபியா சாப்டர் 1 - கார்த்திக் நரேன்
13. பென்குயின் - ஈஸ்வர் கார்த்திக்
14. சியான்கள் - வைகறை பாலன்
15. பாரம் - பிரியா கிருஷ்ணசாமி
16. செத்தாலும் ஆயிரம் பொன் - ஆனந்த் ரவிச்சந்திரன்
17. பொன்மகள் வந்தாள் - ஜெ.ஜெ.பிரெட்ரிக்
18. கன்னி மாடம் - போஸ் வெங்கட்
19. கல்தா - எஸ்.ஹரி. உத்ரா
20. வானம் கொட்டட்டும் - தன சேகரன்
இதுகுறித்து விழாக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளியாகும் குறும்படங்கள் - காணொளிகள் முழுநீளத் திரைப்படங்களுக்கு தமிழர் விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு(2020) வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட படங்கள், தமிழர் விருதுகளை பெறவுள்ள தமிழக கலைஞர்களின் விவரங்களை அறிவித்திருக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.