இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய் ஆகிய இருவருக்குப் பிறகு அதிகமான குழந்தைகளை தன் ரசிகர்களாக வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன் என்று சொல்கிறார்கள். அவருடைய படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்ற பெயரையும் பெற்றவர்.
ஆனால், சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ' ஆகிய படங்கள், அதற்கு முன்பு வௌவிந்த ''ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஆகிய படங்கள் அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. சில படங்கள் படுதோல்வியிலும், சில படங்கள் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றன.
தனக்கு சரியானதொரு திருப்புமுனை வேண்டுமென்று சிவகார்த்திகேயன் காத்திருந்தார். 'டாக்டர்' படத்தைத்தான் அவர் பெரிதும் நம்பியிருக்கிறார் என்று படம் வெளியாவதற்கு முன்பே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இந்த 'டாக்டர்', சிவகார்த்திகேயனைக் காப்பாற்றிவிட்டார்.
தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளிலேயே, 25 நாட்களில் 100 கோடி வசூல் பெற்றுவிட்டது படம். இன்னும் இரண்டு நாட்களில் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. மூன்று நாட்களில் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. இந்த உரிமை, மற்ற உரிமை என 150 கோடி வரை படத்திற்கான வருவாய் கிடைக்கும். அதில் எவ்வளவு லாபம் என்பதை சொல்ல மாட்டார்கள்.
ஆனால், சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'டான்' படத்திற்குத்தான் இதனால் நல்ல லாபம். படம் நல்ல விலை போக வாய்ப்புள்ளது. அந்தப் படமும் வெற்றி பெற்றால், 'டாக்டர், டான்' என...'டா...டா...' படங்களை அதிகம் எதிர்பார்க்கலாம்.