நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு, பிறமாநிலங்கள் தவிர, உலகம் முழுவதும் படத்தை 1193 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 677 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. அடுத்து ஐக்கிய அரபு நாடுகளில் 117, மலேசியாவில் 110, இலங்கையில் 86, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 85, ஐரோப்பிய நாடுகளில் 43, யுனைட்டெட் கிங்டம் 35, சிங்கப்பூர் 23, கனடா 17 என மொத்தமாக 1193 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் 'அண்ணாத்த' தானாம்.
தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களிள் வெளியாகும் எனத் தெரிகிறது. ஆந்திரா, தெலங்கானா, கேரளா, வட இந்தியா என 1000 தியேட்டர்களில் வெளியாகவும் வாய்ப்புள்ளது. நாளைக்குள் இந்த விவரங்கள் தெரிய வரும்.