லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்(46) மாரடைப்பால் காலமானார். அவருக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டார் என அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு கன்னடத் திரையுலக ரசிகர்கள், திரையுலகினரை மட்டுமல்ல இந்தியத் திரையுலகினர், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது உடல் பெங்களூருவில் உள்ள கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு
துணை ஜனாதிபதி டுவிட்டரில், ‛‛கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் அகால மறைவு வேதனை அளிக்கிறது. குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கி பிறகு தனித்துவமான நடிகர், பின்னணி பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என முத்திரை பதித்தார். உண்மையில், அவர் பல திறமைகளைக் கொண்டவர். அவரது குடும்பத்தினருக்கும், கன்னட திரையுலகினருக்கும், கன்னட மக்களுக்கும் இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை இறைவன் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி டுவிட்டரில், ‛‛புனித் ராஜ்குமார் எனும் திறமையான நடிகரை நம்மிடமிருந்து கொடுமையான விதி பறித்து விட்டது. அவர் இறக்கும் வயது கிடையாது. வரும் தலைமுறையினர் அவரது அற்புதமான படைப்புகள், ஆளுமைக்காக நினைவு கூறுவார்கள். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில், கன்னட சினிமாவின் சாதனை நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பல ஆண்டுகளாக எங்கள் இருவரது குடும்பங்களும் நல்லுறவைப் கொண்டுள்ளன. அதனால் இது எனக்கு தனிப்பட்ட இழப்பு. தலைவர் கருணாநிதி மறைவின் போது எங்களின் எங்களின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து தனது குடும்பத்தின் அனுதாபங்களை தெரிவித்த அந்தக் கனிவான செயல் இன்னும் என் நெஞ்சில் நீங்காமல் இருக்கிறது. திறமையான ஒருவரை கன்னட சினிமா இழந்துவிட்டது. புனித்தை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், கர்நாடக மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா
இளம் வயதிலேயே புனித் ராஜ்குமார் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்.
குஷ்பு
அப்பு(புனித் ராஜ்குமார்) எங்களை இப்படி உன்னால் நொறுக்கி விட முடியாது. சிறந்த மனிதர் நீங்கள். இந்த செய்தியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போகாதே அப்பு.. திரும்பி வா.. என பதிவிட்டுள்ளார். அதோடு, ‛‛வாழ்க்கை கணிக்க முடியாத ஒன்று. முடிந்தவரை மற்றவர்களிடம் பகைமை கொள்ளாதீர்கள், சண்டை போடாதீர்கள், வெறுக்காதீர்கள், மகிழ்ச்சியை மட்டும் பரப்புங்கள் என பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன்
வெகு சீக்கிரமே எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டீர்கள். அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் உள்ளோம். உங்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வேன். ஆன்மா சாந்தி அடையட்டும்.
சோனு சூட்
இதயம் நொறுங்கியது. நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம்
போனிகபூர்
பல ரசிகர்களின் மனதை வென்ற ஒரு மிக சிறந்த நடிகரின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்
சிரஞ்சீவி
குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கண்ணீர் இரங்கல்கள். ஒட்டுமொத்த கன்னட மற்றும் இந்தியத் திரையுலகத்திற்கே பெரும் இழப்பு
பிருத்விராஜ்
இது மிகவும் வலிக்கிறது! குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த சோகத்தை தாங்கும் சக்தி கிடைக்கட்டும்
மகேஷ் பாபு
புனித் ராஜ்குமாரின் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன். நான் சந்தித்த மற்றும் பழகிய மிகவும் எளிமையான மனிதர்களில் ஒருவர். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
நாசர்
நடிகர் நாசர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், புனீத்... என் மனதும் அறிவும் நம்ப மறுக்கிறது... உன் முகத்தில் எக்கணமும் நிலைத்து நிற்கும் அகன்ற சிரிப்பு எப்படி உறைந்து போனது. நான் உணர மறுக்கிறேன். நீ எமைவிட்டு போனாய் என்று. புனீத்.... புனீத்.... பூனீத்'' என தெரிவித்துள்ளார்.