பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விருந்து ஒன்றிற்காக புதுச்சேரி சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகா படுகாயமடைந்தார். அவருடன் பயணித்த இரு ஆண் நண்பர்கள் சிறு காயங்களுடன் தப்பித்து விட, யாஷிகாவின் உயிர் தோழியான வள்ளி ஷெட்டி பவானி மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா, சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து வீடு திரும்பிய யாஷிகா, கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே சிகிக்சையில் உள்ளார். அவருக்கு இடுப்பு பகுதியில் பலத்த அடிபட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நடப்பதற்கு பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் படுக்கையிலிருந்து மெதுவாக கீழே இறங்கி நடப்பதற்கு பயிற்சி செய்கிறார் யாஷிகா. விரைவாக குணமடைந்து வரும் யாஷிகாவின் இந்த வீடியோ, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




