பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' |

கூட்டத்தில் ஒருவன்' இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், நடிகை ரெஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் உருவாகிய உள்ள இப்படம் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் வழக்கறிஞராக ஏன் நடித்தேன் என்பது குறித்து முதன்முறையாக நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார். அதில், இந்த படத்தில் நான் வழக்கறிஞராக நடிப்பதற்கு முன்பு நீதியரசர் சந்துரு ஐயாவை சந்தித்து பேசினேன். ஏற்கனவே அவரை பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கேன். அவர் வழக்கறிஞராக பணியாற்றியபோது, மனித உரிமை தொடர்பாக வழக்குகளில் சம்பளம் பெற்றதில்லையாம். இதுபோன்ற பல விஷயங்களை சேகரித்த பின்னர் அவரை சந்தித்தேன். அப்போது அவர் இளமைக்காலத்தில் எவ்வாறு இருந்தார் என்பதை தெரிந்துக்கொண்டேன்.
நீதித்துறையில் இவர் செய்த விஷயங்களை உலகிற்கு கொண்டு சேர்க்க நாங்கள் நினைத்தோம். நீதிபதி சந்துரு போன்றோர் போற்றுதலுக்கு உரியவர்கள். அவரை போன்ற ஒருவரை யாரும் கண்டுகொள்ளவுமில்லை, உரிய மரியாதையையும் செய்யவில்லை, அதனால் அவரின் கதையை சொல்லி இளம் மனதில் அக்கினிப் பிரவேசம் செய்ய எண்ணினோம். அதன் சாட்சியாகதான் ஜெய் பீம் திரைப்படம் உருவானது. இந்த படத்திற்காக உயர்நீதிமன்ற போன்று மிகப்பெரிய செட் அமைத்தோம். இது தமிழ் திரையுலகில் யாரும் செய்யாத ஒன்று. இவை அனைத்தையும் ஒங்கிணைக்கவே இப்படத்தில் முதல்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தை நான் ஏற்றேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.