இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சென்னை:நடிகர் ரஜினிகாந்த், 71, நேற்றிரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் ரஜினியின் திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான, 'தாதா சாஹேப் பால்கே' விருதை அறிவித்தது. கடந்த 25ம் தேதி டில்லியில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதை வழங்கி கவுரவித்தார்.அதன்பின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை ரஜினி சந்தித்து வாழ்த்து பெற்றார். டில்லி பயணத்தை முடித்து, ரஜினி நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணி அளவில், திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.'முழு உடல் பரிசோதனைக்காக, ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நலமுடன் உள்ளார். இன்று வீடு திரும்புவார்' என, அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம், ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைபட்டதாகவும்; ஏற்கனவே மாற்றப்பட்ட சிறுநீரகத்தின் செயல் திறன் திடீரென குறைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும், மருத்துவமனை தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.