ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதிபாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛அண்ணாத்த'. இமான் இசையமைத்துள்ளார். இதன் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் விமர்சனங்களும் முன் வைக்கப்படுகிறது. 24 மணிநேரத்தில் 65 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
தீபாவளிக்கு வெளியாக உள்ள ‛அண்ணாத்த' படத்தை ரஜினி தன் பேரப்பிள்ளைகளுடன் பார்த்தார். இதுகுறித்து ஹூட் சமூகவலைதளத்தில் ரஜினி கூறியுள்ளதாவது: என் குடும்பத்துடன் அண்ணாத்த படம் பார்த்தேன். குறிப்பாக என் பேரன் வேத், தியேட்டரில், நான் நடித்தை தியேட்டரில் முதல் முறை பார்த்தான்; வாழ்க்கையில் மறக்கவே மாட்டான். என் பக்கத்திலேயே உட்கார்ந்து முழு படத்தையும் பார்த்தான். படம் முடிந்ததும், நான்கு நிமிடம் என்னை கட்டிபிடித்துக் கொண்டு விடவே இல்லை. ‛தாத்துா... தாத்துா... ரொம்ப ஹேப்பி' என கூறி சந்தோஷப்பட்டான். அவ்வளவு சந்தோஷம் அவனுக்கு, அவனைப் பார்த்து எனக்கும் சந்தோஷமாயிடுச்சு.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்