டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனரானவர் கார்த்திக் நரேன். முதல் படமான துருவங்கள் 16-லேயே கவனம் பெற்றார். கார்த்திக் நரேன் படத்தையும், மேக்கிங் ஸ்டைலையும் மணிரத்னம், கவுதம் வாசுதேவ மேனன் போன்றவர்கள் பாராட்டினர். கார்த்திக் நரேனின் அடுத்தப் படத்தை கவுதம் தயாரித்தார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, இந்திரஜித், சந்தீப் கிஷன் நடிப்பில் இரண்டாவது படம் நரகாசூரன் ஆரம்பமானது.
படம் முடிந்த பிறகு வெளியிடவும் முடியவில்லை. கார்த்திக் நரேன் அருண் விஜய், பிரசன்னாவை வைத்து மாபியா - சேப்டர் 1 படத்தை எடுத்தார். மணிரத்னம் தயாரித்த நவரசா ஆந்தாலஜியில் ஒரு கதையை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். இரண்டுமே போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தை இயக்கி வருகிறார். படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.
இதையடுத்து கார்த்திக் நரேன் அதர்வா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.