
அப்பாவுக்கு தமிழ் எழுத வராது - சவுந்தர்யா ரஜினி
சென்னையில் நடந்த இந்த செயலியை ரஜினிகாந்த் டில்லியில் இருந்தபடி தனது குரலை பதிவிட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய சவுந்தர்யா, ‛‛என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அவர் டுவீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார். அப்போது பிறந்த யோசனை தான் இந்த ஹூட் செயலி. என் அப்பாவுக்கு தமிழ் நன்றாக படிக்க தெரியும்; ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன். அவருக்கு தமிழ் எழுத தெரியாது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!