அறிமுக இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படம் டிசம்பரில் துவக்கம் | ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் |

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருப்பவர் சினேகன். கடந்த ஜூலை மாதம் தனது 8 ஆண்டு காதலியான நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது ரெக்கார்டிங் தியேட்டருக்கு சினேகன்- கன்னிகா தம்பதியை அழைத்து வாழ்த்தியவர், சினேகனுக்கு ஒரு மோதிரத்தையும் பரிசாக வழங்கியிருக்கிறார். அந்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ள சினேகன், எங்கள் திருமணத்திற்கு வர இயலாததால் நேரில் அழைத்து மோதிரம் அணிவித்து அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்த இசைஞானிக்கு நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.




