''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தஞ்சை மாவட்டத்திலுள்ள ரெட்டிப்பாளையம் எனும் சிறிய கிராமத்தில் பிறந்த நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆண்டனி தாசன். குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் பாடல்கள் இயற்றிப் பாடும் கலைஞராக உருவெடுத்துள்ளார். சமீபகாலமாக நடிக்கவும் தொடங்கி இருக்கிறார். அவியல், எம்.ஜி.ஆர் மகன் படங்களுக்கு இசை அமைத்தும் வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு பின்னணி பாடல் பாடி அடுத்த கட்டத்தை அடைந்துள்ளார். அண்ணாத்த படத்தின் 3வது பாடல் நேற்று வெளியானது. மருதாணி செவப்பு செவப்பு மகராணி சிரிப்பு சிரிப்பு... என்ற பாடலை நாட்டுப்புற மெட்டில் பாடி உள்ளார். அவருடன் வந்தனா சீனிவாசன் இணைந்து பாடி உள்ளார். அமுதவன் எழுதிய பாடலுக்கு இமான் இசை அமைத்துள்ளார்.
இந்த பாடலுக்கு ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு ஆடியுள்ளனர். இது ஒரு கொண்டாட்ட பாடலாக படமாக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷின் பூப்புனித நன்னீராட்டு விழா, பாடலுக்கான சூழலாக அமைந்துள்ளது. நூற்றுக்கணகான துணை நடிகர்கள், நடன கலைஞர்களை கொண்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.