நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

என் ராசாவின் மனசிலே, அரண்மனை கிளி, ஆயிரத்தில் ஒருவன் உட்பட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள 83 வயதான நடிகர் பி.வி.நம்பிராஜன், அஸ்திவாரம் என்ற படத்தில் முதன் முறையாக கதையின் நாயகனாக நடிக்கிறார்.
ஜி.ஜி.ஆர். மூவி எண்டர்பிரைசஸ் சார்பில் ஏ.இசட் .ரிஜ்வான் தயாரிக்கும் இந்த படத்தில் இளம் நாயகன் ஒருவரும் அறிமுகமாகிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க இருக்கிறார்கள். இயக்குனர் பாரதி கணேஷிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற உடுமலை எஸ்.அஜ்மீர் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: வயது குறைந்த நடிகர்கள் மேக்கப் போட்டு முதுமை தோற்றத்தில் நடித்த படங்கள் பல உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல். ரஜினி, விஜயகாந்த், வி.கே.ஆர், சத்யராஜ், பிரபு, சரத்குமார், என நிறைய நடிகர்கள் அப்படி நடித்த படங்கள் உள்ளது. ஒரிஜினலாக 83 வயதுடைய பி.வி.நம்பிராஜன் நாயகனாக நடிக்கும் படம் இது. நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது. திண்டுக்கல், பித்தளைபட்டி, ஆத்தூர், சின்னாளபட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய ஊர்களில் படமாகிறது. என்றார்.