மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் சர்காரு வாரிபாட்டா. வங்கியில் நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தபடத்தில் மகேஷ்பாபுவின் காதலியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு மகேஷ்பாபு- கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இரண்டு முக்கிய பாடல் காட்சி படமாகி வருகிறது.
இந்தநிலையில் இன்று கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் என்பதால் அவரது போஸ்டர் ஒன்றை அப்படக்குழு வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.