சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தியேட்டர்களுக்குப் போட்டியாக ஓடிடி தளங்களிலும் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. நாளை அக்டோபர் 14 ஆயுத பூஜையை முன்னிட்டு தியேட்டர்களில் 'அரண்மனை 3' படமும், ஓடிடி தளங்களில் 'உடன்பிறப்பே, விநோதய சித்தம்' ஆகிய படங்களும் வெளியாகின்றன.
இவற்றில் 'உடன்பிறப்பே' படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது அதிகப் படங்களில் நடித்து முடித்துள்ளவர்களில் சசிகுமாரும் ஒருவர். விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ் ஆகியோருடன் சசிகுமாரும் அதிகப் பட போட்டியில் உள்ளார்.
'எம்ஜிஆர் மகன், ராஜ வம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இவற்றில் 'ராஜவம்சம்' படம் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. 'எம்ஜிஆர் மகன்' படத்தை எப்போதோ வெளியிட்டிருக்க வேண்டியது. ஆனால், கொரோனாவால் தள்ளிப் போனது. இப்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சசிகுமார் நான்கு படங்களில் நடித்து முடித்துள்ளதால் அப்படங்களை தியேட்டர்களில் வெளியிட சரியான தேதிகள் அமைய வாய்ப்பில்லை. எனவே, ஓடிடி தளத்தில் விற்று 'எம்ஜிஆர் மகன்' தயாரிப்பாளர் நல்ல லாபம் பார்த்துவிட்டார். அதை மற்ற சசிகுமார் படத் தயாரிப்பாளர்களும் தொடர்வார்களா அல்லது தியேட்டர்களில் வெளியிட சரியான இடைவெளிக்குக் காத்திருப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.