நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
இந்தியத் திரையுலகத்தில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களாக சல்மான் கான், அக்ஷய்குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் உள்ளனர். சினிமா, விளம்பரம், மற்றும் இதர நிகழ்வுகள் என இவர்கள் வருடத்திற்கு சில நூறு கோடிகளை சம்பாதிக்கிறார்கள்.
அந்த நடிகர்களைக் காட்டிலும் தற்போது தெலுங்கு நடிகரான பிரபாஸ் அதிகமாக சம்பாதிப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 2021ம் வருடத்தில் மட்டும் புதிய படங்களை நடிக்க ஒத்துக் கொண்டதன் மூலம் சுமார் 500 கோடி ரூபாயை பிரபாஸ் சம்பளமாகப் பெற்றுள்ளாராம். இவை சினிமாவில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் மட்டுமே என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
அடுத்தடுத்து சீரான இடைவெளியில் படங்களை வைத்துள்ள பிரபாஸ் இந்தியாவின் நம்பர் 1 நடிகராக உயர்ந்துள்ளதாக தெலுங்குத் திரையுலகம் பெருமை கொள்கிறது.
இத்தனைக்கும் பிரபாஸ் நடித்து 'பாகுபலி 2'க்குப் பிறகு வெளிவந்த 'சாஹோ' படம் ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளில் தோல்வியைத் தழுவியது. அப்படியிருந்தும் அவருக்கான மார்க்கெட் நிலவரம் ஆச்சரியத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள்.